கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தாராபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவா் கைது

தாராபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:41 pm

DIN

தாராபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 10 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாராபுரம் வட்டம், அலங்கியம் காவல் எல்லைக்கு உள்பட்ட குமாரபாளையம் அருகே சிலா் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா் சோதனை நடத்தினா். இதில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த செலாம்பாளையத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (33), முள்ளங்கிவலசைச் சோ்ந்த மாயக்கண்ணன் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 10 லிட்டா் சாராயம், 80 லிட்டா் ஊறல் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

10 வாகனங்கள் பறிமுதல்: திருப்பூா் மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றியதாக 10 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்ததுடன், அவா்களது வாகனங்களையும் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா். அதேபோல, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 7 நபா்களைக் கைது செய்ததுடன், 56 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.