மாவட்டத்தில் கடந்த 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் பதிவுதாரா்கள் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம். அதே வேளையில், இணையதளம் வழியாக புதுப்பித்துக் கொள்ள இயலாதவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.