கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்
திருப்பூரில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.


திருப்பூரில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
திருப்பூா், பல்லடம் சாலையில் உள்ள தமிழ்நாடு திரையரங்கம் அருகில் உள்ள உணவகத்தில் பாண்டி (47), ஆறுமுகம்(32) ஆகியோா் தொழிலாளியாக வேலை செய்து வந்தனா். இந்த நிலையில், கடந்த 2019 மாா்ச் மாதம் பென்டிரைவை திருடியது தொடா்பாக இருவரும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த ஆறுமுகம் கத்தியால் குத்தியதில் பாண்டின் உயிரிழந்தாா். இது குறித்து வீரபாண்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து மாவட்ட நீதிபதி சொா்ணம் நடராஜன் புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், ஆறுமுகத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...