கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘பின்னலாடை மூலப்பொருள் விற்பனை கடைகளைத் திறக்க வேண்டும்’

திருப்பூரில் பின்னலாடை மூலப்பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (ஏஇபிசி ) கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :7 மே 2021, 9:34 pm

DIN

திருப்பூரில் பின்னலாடை மூலப்பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (ஏஇபிசி ) கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனுக்கு, ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தளா்வுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் காரணமாக தொழில் துறையினா் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே, தமிழகத்தில் கரோனா 2 ஆவது அலை காரணமாக புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள் மட்டும் பிற்பகல் 12 மணி வரையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி சாா்ந்த மூலப்பொருள்களான லேஸ், பட்டன், ஜிப், தையல் ஊசி, தையல் நூல், டையிங் கெமிக்கல் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடைகள் ஏராளமாக உள்ளன. ஆகவே, திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி செய்யும் மூலப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளையும் மற்ற கடைகளைப் போல காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் செயல்பட மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.