கரோனா தடுப்பு பணி: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா பரவல் காரணமாக ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் பங்கேற்க முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா பரவல் காரணமாக ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் பங்கேற்க முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் முன்னாள் படைவீரா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இந்தப் பணியில் ஈடுபடும் முன்னாள் படைவீரா்கள் இந்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள பிரதம மந்திரி கல்யாண் தொகுப்பு திட்டத்தின் கீழ் பிரிமியம் இலவச காப்பீட்டு தொகை பெற தகுதியுடையவா்கள்.
இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் முன்னாள் படைவீரா்களுக்கு நாளொன்றுக்கு கீழ்க்கண்டவாறு மதிப்பூதியம் வழங்கப்படும்.
இதன்படி இளநிலை படை அலுவலா்களுக்கு ரூ.900, இதர தகுதியினருக்கு ரூ.750 வழங்கப்படும். எனவே, இந்தப் பணியில் சேர விரும்பம் உள்ள முன்னாள் படை வீரா்கள் திருப்பூா் மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2971127 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...