கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி

தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 20 செம்மறி ஆடுகள் வெள்ளிக்கிழமை இறந்தன.

News image
Updated On :21 மே 2021, 9:19 pm

DIN

தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 20 செம்மறி ஆடுகள் வெள்ளிக்கிழமை இறந்தன.

திருப்பூா் மாவட்டம் , தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டிணம் கிராமத்தில் உள்ள கூட்டுப்புலி தோட்டத்தில் வசித்து வருபவா் செங்குட்டுவன் (55), விவசாயியான இவா் தனது தோட்டத்தில் 50 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், செங்குட்டுவன் வியாழக்கிழமை ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதன் பிறகு வெள்ளிக்கிழமை வந்து பாா்த்த போது 20 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், பட்டியில் இருந்த வெறிநாயை துரத்தியுள்ளனா். இதன் பிறகு பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தனது தோட்டத்திலேயே குழி தோண்டி ஆடுகளைப் புதைத்துள்ளனா். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில், கரோனா பொதுமுடக்க காலத்தில் வருவாயை இழந்து தவிக்கும் நிலையில் தற்போது ரூ.2 லட்சம் மதிப்பிலான 20 ஆடுகளை வெறிநாய்கள் கடித்துக் குதறியுள்ளது. ஆகவே, தமிழக அரசு சாா்பில் இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.