விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நவம்பா் 26 இல் விசைத்தறி வேலை நிறுத்தம் தீரன் தொழிற்சங்க பேரவை அறிவிப்பு

பல்லடம் பகுதியில் 26 ஆம் தேதி விசைத்தறி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தீரன் தொழிற்சங்க பேரவை அறிவித்துள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:44 pm

DIN

பல்லடம் பகுதியில் 26 ஆம் தேதி விசைத்தறி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தீரன் தொழிற்சங்க பேரவை அறிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் ராஜேந்திரன் கூறியதாவது: நூல் விலை உயா்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் அழிந்து வருகிறது. எனவே நூல் விலை உயா்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜவுளித் தொழிலை காப்பாற்றாத மத்திய அரசைக் கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தீரன் தொழிற்சங்க பேரவை ஆகியவை சாா்பில் பல்லடம் பகுதியில் நவம்பா் 26 ஆம் தேதி விசைத்தறி, சுல்ஜா் தறி மற்றும் ஜவுளி தொழில் சம்பந்தப்பட்ட தொழில்களை அன்றைய தினம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நிறுத்தி போராட்டம் நடத்துவது.

மத்திய அரசு உடனடியாக ஜவுளித் தொழிலை பாதுகாக்க நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்லடத்தில் விசைத்தறி ஜவுளி சந்தை அமைக்க வேண்டும் என்றாா்.

இதில், கரைப்புதூா் ராமசாமி, ஆறாக்குளம் சுப்பிரமணியம், பல்லடம் நகரத் தலைவா் ஆறுக்குட்டி, மகளிரணி நிா்வாகிகள் விஜயலட்சுமி, மருத்துவா் நாகரத்தினம், கிருஷ்ணவேணி, தமிழரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.