தாராபுரம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கரோனா
தாராபுரம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தாராபுரம் அருகே உள்ள அரசுப் பள்ளி.

தாராபுரம் அருகே உள்ள அரசுப் பள்ளி.
தாராபுரம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் கொளத்துப்பாளையத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளியில், 238 மாணவர்கள், 138 மாணவிகள் உள்பட மொத்தம் 376 பேர் படிக்கின்றனர்.
இந்தப் பள்ளியில் பகுதிய நேர ஆசிரியராகப் பணியாற்றி வரும் 50 வயது ஆண் ஆசிரியருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் தெரியவந்தது. இதையடுத்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பரிசோதனையின் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியானதில் ஆசிரியருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும் ஆசிரியர் பள்ளிக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி அரை நாள் மட்டுமே வந்து சென்றதாலும், சக ஆசிரியர்களுக்கு அறிகுறிகள் இல்லாததால் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.
அதே வேளையில், இந்தப் பள்ளி திங்கள்கிழமை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...