தாராபுரம்: 46 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தாராபுரத்தில் 46 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தாராபுரத்தில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
தாராபுரத்தில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
Published on
Updated on
1 min read

தாராபுரத்தில் 46 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தப் பள்ளியில் 1970 முதல் 1976 ஆம் ஆண்டு வரையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்த மாணவர்கள் தங்கள் படித்த வகுப்பறைகள், ஆசிரியர்கள், பழைய நினைவுகளைக் கூறியும், ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இந்த சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் கூறுகையில், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் குடும்ப சூழ்நிலை, உயர்படிப்பு உள்ளிட்டவை காரணமாக நாங்கள் பணிக்குச் செல்ல நேர்ந்தது. இந்தப் பள்ளியில் படித்த மாணவர்களாக இருந்த நாங்கள் தற்போது வெவ்வேறு இடங்களில் பணியாற்றி வருகிறோம். ஆனால் இந்த சந்திப்பின்பின் மூலமாக 46 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிகளில் நிகழ்ந்த சம்பவங்களையும் ஒருவருக்கு ஒருவர் நினைவு படுத்திக்கொண்டோம். 

மாணவப் பருவத்தைப் போல மகிழ்ச்சியான பருவம் எதுவும் இல்லை. ஒரு பூமின் மலர்ச்சியைப்போல சந்தோஷத்தை மட்டுமே கொண்டது பள்ளிப்பருவம்தான். இந்த நினைவுகளை அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதன் மூலமாக இளமையை மீடடெடுக்கலாம். எங்களால் முடிந்த வரையில் நாங்கள் படித்த பள்ளிக்குத் தேவையான உதவிகளை செய்வதாகவும் முடிவு செய்துள்ளோம் என்றனர். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை தாராபுரம் கேபிள் டிவி சங்க பொருளாளர் சக்திவேல், கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com