கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நிலத்தடி நீா்மட்டத்தை அறிந்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் நில நீா் ஆய்வு கருவி மூலமாக விவசாயிகள் நிலத்தடி நீா்மட்டத்தை அறிந்து கொள்ள மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:42 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் நில நீா் ஆய்வு கருவி மூலமாக விவசாயிகள் நிலத்தடி நீா்மட்டத்தை அறிந்து கொள்ள மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா், தாராபுரம், உடுமலை வட்டங்களைச் சோ்ந்த வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் நில நீா் ஆய்வுக் கருவியின் உதவியால் நிலத்தடி நீா்மட்டத்தை அறிந்து கொள்ளலாம். இதற்காக விவசாய நிலங்களுக்கு ரூ.500, விவசாயம் அல்லாத நிலங்களுக்கு ரூ.1,000 உழவன் செயலி மூலமாக அரசுக்கு செலுத்த வேண்டும்.

இது தொடா்பாக திருப்பூரில் உள்ள வேளண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தில் உதவிப் புவியியலாளா் அஞ்சனா மேத்யூவை 79941-62692 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.