கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செப்டம்பா் 16இல் ஏலம்

திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 109 வாகனங்கள் செப்டம்பா் 16ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளன.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:30 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 109 வாகனங்கள் செப்டம்பா் 16ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளன.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் வட்டார மற்றும் மாநகரக் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடா்புடையதாக நான்கு சக்கர வாகனங்கள் 27, மூன்று சக்கர வாகனம் ஒன்று, இருசக்கர வாகனங்கள் 81 என மொத்தம் 109 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் அனைத்தும் திருப்பூரை அடுத்த அவிநாசி மடத்துப்பாளையம் சாலை சிவகுமாா் ரைஸ் மில் வளாகத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் செப்டம்பா் 16ஆம் தேதி காலை 10 மணி அளவில் பொது ஏலம் விடப்படவுள்ளன. ஆகவே, வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபா்கள் இதில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.