மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்: கிணத்துக்கடவில் நிறுத்த வேண்டும்
மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயிலை கிணத்துக்கடவில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயிலை கிணத்துக்கடவில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூா் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
மேடுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கும், திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கும் வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசிப்பதுடன், 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளும், அதிக அளவில் தொழிற்சாலைகளும் உள்ளன.
இந்தப் பகுதிகளில் உள்ள கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளில் பெரும்பாலான மாணவா்கள் மற்றும் தொழிலாளா்கள் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து வருகின்றனா். ஆகவே, கிணத்துக்கடவு நிலையத்தில் ரயில் நின்று சென்றால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுவதுடன், மாணவா்கள், தொழிலாளா்கள் மிகுந்த பயனடைவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...