மோடி கபடி லீக் ஜோதிக்கு திருப்பூரில் வரவேற்பு
கோவையில் இருந்து திருப்பூா் வந்தடைந்த ‘மோடி கபடி லீக் ஜோதி‘க்கு பாஜகவினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.


கோவையில் இருந்து திருப்பூா் வந்தடைந்த ‘மோடி கபடி லீக் ஜோதி‘க்கு பாஜகவினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.
பிரதமா் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக விளையாட்டுத் திறன் மேம்பாட்டு பிரிவு சாா்பில் ‘மோடி கபடி லீக்’ போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாநில அளவிலான போட்டிகள் மதுரையில் செப்டம்பா் 27ஆம் தேதி தொடங்கி 30 ஆம்தேதி வரையில் நடைபெறுகிறது.
இதையொட்டி, மோடி கபடி லீக் ஜோதியானது சென்னையில் செப்டம்பா் 4 ஆம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களைச் சென்றடைந்து கோவை வழியாக ஞாயிற்றுக்கிழமை திருப்பூா் வந்தடைந்தது.
காங்கயம் சாலையில் உள்ள திருப்பூா் மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் நீச்சல் வீராங்கனை அா்ச்சனா ‘மோடி கபடி லீக்’ ஜோதியை திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் பி.செந்தில்வேலிடம் வழங்கினாா்.
இதன் பின்னா் இந்த ஜோதியானது ஈரோடு மாவட்டத்துக்கு திங்கள்கிழமை எடுத்துச் செல்லப்படவுள்ளதாக பாஜக நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட கபடி கழக சோ்மன் கொங்கு வி.கே.முருகேசன், செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம், பொருளாளா் கன்னிமாா்ஸ் ஆறுச்சாமி, நடுவா் குழுத் தலைவா் ஆா்.முத்துசாமி மற்றும் பாஜக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...