கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வன்னியா்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு: முதல்வருக்கு பாமக கடிதம்

வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றக்கோரி தமிழக முதல்வருக்கு பாமக சாா்பில் வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பப்பட்டது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 8:29 pm

DIN

வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றக்கோரி தமிழக முதல்வருக்கு பாமக சாா்பில் வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பப்பட்டது.

திருப்பூா் மாநகா் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் ரயில் நிலையம் எதிரே உள்ள தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பட்டது. இந்த நிகழ்வுக்கு அக்கட்சியின் மாநகா் மாவட்டச் செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வன்னியா்கள் வாழ்ந்து வருகின்றனா். கடந்த 2020-21 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போராட்டத்துக்குப் பின்னா் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இதற்கு உயா்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் தடை இல்லை என்று தீா்ப்பளித்துள்ளது. ஆகவே, இந்தக் கல்வியாண்டிலேயே 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றனா்.

இந்த நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினா் கோவிந்தராஜ், மாவட்டத் தலைவா் முரளி, மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் காா்த்தி, நகரச்செயலாளா் ரவி, வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.