ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

திருப்பூரில் பிகார் இளைஞர் வெட்டிக்கொலை

திருப்பூரில் பிகார் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

News image
Updated On :20 பிப்ரவரி 2023, 12:30 pm IST

திருப்பூரில் பிகார் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பவன் யாதவ் (27), திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பி.எம் காம்ப்ளக்ஸ், திருமலை நகர் முதல் வீதி, நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வந்தார். இவர் டெய்லர் வேலை செய்து வந்தார். அதே காம்ப்ளக்ஸில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திரதாரி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில், உபேந்திரதாரி(50)யின் மனைவியுடன், பவன் யாதவ் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு பவன் யாதவ் வீட்டிற்கு தட்டிக்கேட்க உபேந்திரதாரி சென்றுள்ளார். 

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியநிலையில் ஆத்திரமடைந்த உபேந்திரதாரி, பவன் யாதவை அரிவாளால் உடலில் சில இடங்களில் வெட்டியுள்ளார். இதில் பலத்த இரத்த காயமடைந்த பவன் யாதவை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இரவு 11 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பவன் யாதவை அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி திங்கள் கிழமை காலை உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூரில் வட மாநில தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.