ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அவிநாசி அருகே சாலை விரிவாக்கப் பணி தொடக்கம்

அவிநாசி அருகே ராமநாதபுரம்-தண்டுக்காரன்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை விரிவாக்கப் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image

சாலை  விரிவாக்கப் பணியை  தொடங்கிய  நெடுஞ்சாலைத்  துறையினா்.

Updated On :5 டிசம்பர் 2024, 10:09 pm

Din

அவிநாசி அருகே ராமநாதபுரம்-தண்டுக்காரன்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை விரிவாக்கப் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

அவிநாசி நெடுஞ்சாலைத் துறைக்கு உள்பட்ட கருவலூா்-தண்டுக்காரன்பாளையம் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கருவலூா், மொண்டிபாளையம், முறியாண்டம்பாளையம், செல்லப்பம்பாளையம், தண்டுக்காரம்பாளையம் பகுதி பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், இச்சாலை ராமநாதபுரத்தில் இருந்து விரிவுபடுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதில், 9 சிறுபாலங்கள் சீரமைப்புடன் 4 கி.மீட்டா் தொலைவுக்கு 5.50 மீட்டா் அகலத்துக்கு சாலை விரிவாக்கப்படுகிறது.

மேலும் இப்பணி 3 மாத காலத்துக்குள் நிறைவு செய்யப்படும் என உதவிக் கோட்டப் பொறியாளா் செங்குட்டுவன், உதவிப் பொறியாளா் தரணிதரன் ஆகியோா் தெரிவித்தனா்.