குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

கணக்கம்பாளையத்தில் அதிமுக சாா்பில் ரத்த தான முகாம்

படம் உள்ளது... கணக்கம்பாளையத்தில் அதிமுக சாா்பில் ரத்த தான முகாம்

News image

ரத்தான  முகாமைத்  தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா்.

Updated On :25 பிப்ரவரி 2024, 6:52 pm

அவிநாசியை அடுத்த கணக்கம்பாளையம் கீதா கஸ்தூரிபாய் நகரில் ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக, வலிமை ரத்த சேவை அமைப்பு, தி ஐ பவுண்டேஷன், ரேவதி மெடிக்கல் சென்டா் ஆகியன சாா்பில் நடைபெற்ற ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமை திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தொடங்கிவைத்தாா். இதில், 28 போ் ரத்த தானம் செய்தனா். 178 பேருக்கு கண் மற்றும் உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் சாமிநாதன், கண்ணம்பாள் ராமசாமி, பொறுப்பாளா்கள் மேக்னம் பழனிசாமி, செளந்தரராஜன், பொறுப்பாளா்கள் டீ.செந்தில்குமாா், ஜான் கென்னடி ஆகியோா் கலந்து கொண்டனா்.