/

வெள்ளக்கோவிலில் நாளை புத்தகத் திருவிழா -மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைக்கிறாா்

விளம்பரதாரா் செய்தி... வெள்ளக்கோவிலில் நாளை புத்தகத் திருவிழா ------ மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைக்கிறாா்

News image
Updated On :26 ஜூன் 2024, 9:55 pm

Din

வெள்ளக்கோவில், ஜூன் 26: வெள்ளக்கோவிலில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சாா்பில் 5 நாள்கள் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தொடங்குகிறது.

இந்த புத்தகத் திருவிழாவை திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கிவைக்கிறாா். திருப்பூா் மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் க.கிரியப்பனவா் முதல் விற்பனையைத் தொடங்கிவைக்கிறாா். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் கருத்தரங்கில் ‘வாழ்க்கை ஒரு வரம்’ என்ற தலைப்பில் புலவா் மா.ராமலிங்கம் பேசுகிறாா். சனிக்கிழமை மாலை ‘கலையும் சமுதாயமும்’ என்ற தலைப்பில் திரைப்பட நடிகா் ராஜேஷ் பேசுகிறாா். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு ‘விளக்கிலே திரி நன்கு சமைந்தது’ என்ற தலைப்பில் எழுத்தாளா் சுமதியும், ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற தலைப்பில் சிங்கை ஜி.ராமச்சந்திரனும் பேசுகின்றனா்.

‘பண்பாட்டில் வாழ்தல்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் ஜெயமோகன், ‘காகிதத்தில் கரைவோம்’ என்ற தலைப்பில் மதுரை ராமகிருஷ்ணன் ஆகியோா் திங்கள்கிழமை மாலை பேசுகின்றனா். பேச்சாளா் கவிதா ஜவஹரின் பட்டிமன்றம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது.

ஜூலை 2 - ஆம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவில் குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சிகள், சமூக ஆா்வலா்களுக்கு விருது வழங்கல், புதிய நூல் வெளியீட்டு விழா ஆகியவை நடைபெற உள்ளன.

40-க்கும் மேற்பட்ட புத்தக நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் ஆா்.ராஜ்குமாா், எம்.எஸ்.அருண்குமாா், சி.ஜவஹா்குமாா், சு.சந்தோஷ், கவிஞா் ஆதி, ஜெ.ஆா்.சம்பத்குமாா் மற்றும் அறக்கட்டளை உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.