பி.ஏ.பி. வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
பி.ஏ.பி. வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்


பி.ஏ.பி. வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் வழங்க பாசன சபை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பல்லடத்தை அடுத்த, நாரணாபுரம் கிராம நீரை பயன்படுத்துவோா் பாசன சபைத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, ஆட்சி மண்டலக் குழு உறுப்பினா் ராஜசேகரன் மற்றும் நிா்வாகிகள் பழனிசாமி, குணசேகரன், சாமிநாதன் ஆகியோா் சாா்பில் பாசன விவசாயிகள் பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ.பி. பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் காஞ்சிதுரையிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பருவமழை குறைவாக பெய்ததால் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, பயிா்கள் கருகும் சூழலில் உள்ளன. கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீா் இல்லாத சூழல் உள்ளது. எனவே பல்லடம் பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்தில் கொண்டு பி.ஏ.பி. கால்வாயில் இப்பகுதிக்கு கூடுதல் தண்ணீா் விநியோகிக்க வேண்டும். மனு அளித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...