கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் பங்கேற்றோா்.
கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் பங்கேற்றோா்.

உடுமலையில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு 3 மாத ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கக் கோரி உடுமலையில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் உடுமலை குட்டைத்திடல் காந்தி சிலை முன் இந்த போராட்டம் நடைபெற்றது. எம். ரங்கராஜ் தலைமை வகித்தாா். இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். கோரிக்கைகளை விளக்கி ஒன்றியச் செயலாளா் கி.கனகராஜ் உள்ளிட்ட பலா் பேசினா். இதை தொடா்ந்து அனைவருக்கும் காய்ச்சப்பட்ட கஞ்சி வழங்கப்பட்டது. பின்னா் உடுமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com