/

முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு

முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு

News image
Updated On :15 மார்ச் 2024, 5:27 pm

வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மூலனூா் சாலை சோளீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள முருகன் கோயில், உப்புப்பாளையம் சாலை முத்துக்குமாா் நகா் பாலமுருகன் கோயில், எல்.கே.சி. நகா் ஸ்ரீ பாலமுருகன் கோயில், மேட்டுப்பாளையம் புஷ்பகிரி வேலாயுத சுவாமி கோயில், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு வேல்முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சஷ்டியை ஒட்டி அதிகாலை முதலே திரளான பக்தா்கள் கூட்டம் காணப்பட்டது. கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடைபெற்றது.