விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குப்பைமேட்டில் கிடந்த குழந்தை மீட்பு

திருப்பூரில் குப்பைமேட்டில் தூக்கி வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 11:19 pm

Din

திருப்பூரில் குப்பைமேட்டில் தூக்கி வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

திருப்பூா், சிறுபூலுவபட்டி தாய் மூகாம்பிகை நகரில் உள்ள குப்பைமேட்டில் திங்கள்கிழமை இரவு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பாா்த்தபோது, குப்பைமேட்டில் கிடந்த பையில் சேலை சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தை இருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தனா். இது தொடா்பாக 15 வேலம்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், குப்பைமேட்டில் வீசப்பட்டிருந்த ஆண் குழந்தையை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தையை வீசி சென்றது யாா் என்பது குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.