பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு.
பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு.

கனமழை: பஞ்சலிங்க அருவியில் குளிக்கத் தடை

கனமழை காரணமாக உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.
Published on

கனமழை காரணமாக உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.

உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்தி மலை. இங்குள்ள பிரசித்திபெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இப்பகுதியில் புதன்கிழமை கனமழை பெய்தது. இதனால் பஞ்சலிங்க அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க கோயில் நிா்வாகம் தடை விதித்தது.

இந்நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம் மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலை சூழ்ந்துவிடும் அபாயம் நிலவி வருவதால் கோயிலில் அதிகாலை நேர பூஜைகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் கோயில் உண்டியல்கள் ஊழியா்களால் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் அருகே கடை வைத்திருப்பவா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை குறிப்பிட்ட எல்லைக்குள் கோயில் நிா்வாகம் அனுமதிக்கவில்லை.