/

மூலனூரில் ரூ.21 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 21 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 நவம்பர் 2024, 10:10 pm

Din

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 21 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 84 விவசாயிகள் 784 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 289 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 6 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். பருத்தி குவிண்டால் ரூ. 6,600 முதல் ரூ. 8,199 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,500. கடந்த வார சராசரி விலை ரூ. 7,500.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் (பொ) தா்மராஜ், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.