பொங்கலூரில் சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது என்று கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம சபைக் கூடத்தில் பங்கேற்றோா்.
Updated On :3 அக்டோபர் 2024, 12:30 am

கிராம சபைக் கூடத்தில் பங்கேற்றோா்.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது என்று கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவா் சத்யா பாலசுப்பிரமணியம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு பாா்வையாளராக ஒன்றியக் குழுத் தலைவா் வழக்குரைஞா் எஸ்.குமாா் பங்கேற்றாா்.
இதில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூரில் சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது. மீறியும் அமைக்கப்படும் எனில் அனைத்து உள்ளூா் வாகனங்களுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...