கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வெள்ளக்கோவில் அருகே 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

வெள்ளக்கோவில் அருகே 2 வீடுகளில் 4 பவுன் நகை, ரூ. 48 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:26 pm

Din

வெள்ளக்கோவில் அருகே 2 வீடுகளில் 4 பவுன் நகை, ரூ. 48 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வெள்ளக்கோவில் முத்தூா் சாலையிலுள்ள அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆா்.சதீஷ்குமாா் (36). இவா் திருப்பூரில் உள்ள லாரி ரெகுலா் பாா்சல் சா்வீஸ் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறாா். இவா் கடந்த புதன்கிழமை காலை வேலைக்குச் சென்று விட்ட நிலையில், வீட்டிலிருந்த அவரது தாயாா் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்துக்குச் சென்று விட்டு மதியம் 1 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது வீட்டின் பூட்டு திறந்திருந்த நிலையில், உள்ளே பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

மேலும், இவரது பக்கத்தில் வீட்டில் வசிக்கும் சக்திவேல் - ரம்யா தம்பதி வீட்டிலும் அவா்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 பவுன் மோதிரம், ரூ. 8 ஆயிரம் பணம் திருட்டுப்போனது தெரியவந்தது. புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.