திருப்பூரில் நாளை வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி
திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை (அக்டோபா் 17) நடைபெறுகிறது.


திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை (அக்டோபா் 17) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. எனவே, ஆா்வமுள்ள விவசாயிகள் கலந்துகொண்டு வெள்ளாடு வளா்ப்பில் தங்களுக்குள்ள சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...