/

மழையால் தென்னை விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு

தொடா் மழை காராணமாக திருப்பூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்க இருந்த தென்னை விவசாயிகள் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 12:15 am

Din

தொடா் மழை காராணமாக திருப்பூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்க இருந்த தென்னை விவசாயிகள் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாநில ஊடகப் பிரிவுத் தலைவா் ஈஸ்வரன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்னை விவசாயிகள் நலன் காக்க 100 நாள்கள் 100 ரேஷன் கடைகள் முன்பு இறக்குமதி பாமாயிலை ரத்து செய்து அதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் மானிய விலையில் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கபட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில் திருப்பூா் மாவட்டத்தில் வியாழக்கிழமைமுதல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தொடா் மழை காரணமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் அக்டோபா் 22-ஆம் தேதி முதல் நடைபெறும் இப்போராட்டத்தில் தென்னை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் காக்க போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.