/

கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டம்: மாவட்டத்தில் ரூ.74.66 கோடியில் பணிகள்

கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டம்

News image

பல்லடம் அருகே கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வீட்டை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.

Updated On :17 அக்டோபர் 2024, 8:17 pm

Din

திருப்பூா் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் ஆகிய திட்டங்களில் 3,551 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.74.66 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியத்துக்குள்பட்ட கோடங்கிபாளையம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் அவிநாசியில் 58 பயனாளிகளுக்கு ரூ.2.03 கோடியிலும், தாராபுரத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.1.36 கோடியிலும், குடிமங்கலத்தில் 210 பயனாளிகளுக்கு ரூ.7.35 கோடியிலும், மடத்துக்குளத்தில் 135 பயனாளிகளுக்கு ரூ.4.72 கோடியிலும், மூலனூரில் 62 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடியிலும், பல்லடத்தில் 162 பயனாளிகளுக்கு ரூ.5.67 கோடியிலும், பொங்கலூரில் 77 பயனாளிகளுக்கு ரூ.2.69 கோடியிலும், குண்டடத்தில் 170 பயனாளிகளுக்கு ரூ.5.95 கோடியிலும், காங்கயத்தில் 140 பயனாளிகளுக்கு ரூ.4.90 கோடியிலும், திருப்பூரில் 65 பயனாளிகளுக்கு ரூ.2.27 கோடியிலும், வெள்ளக்கோவிலில் 271 பயனாளிகளுக்கு ரூ.9.48 கோடியிலும், உடுமலைப்பேட்டையில் 234 பயனாளிகளுக்கு ரூ.8.19 கோடியிலும், ஊத்துக்குளியில் 94 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடியிலும் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டத்தின்கீழ் அவிநாசியில் 290 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடியிலும், தாராபுரத்தில் 83 பயனாளிகளுக்கு ரூ.55.72 லட்சத்திலும், குடிமங்கலத்தில் 78 பயனாளிகளுக்கு ரூ.63.97 லட்சத்திலும், மடத்துக்குளத்தில் 111 பயனாளிகளுக்கு ரூ.70.20 லட்சத்திலும், மூலனூரில் 125 பயனாளிகளுக்கு ரூ.66.27 லட்சத்திலும், பல்லடத்தில் 109 பயனாளிகளுக்கு ரூ.65.67 லட்சத்திலும், பொங்கலூரில் 308 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடியிலும், குண்டடத்தில் 78 பயனாளிகளுக்கு ரூ.45.69 லட்சத்திலும்,

காங்கயத்தில் 48 பயனாளிகளுக்கு ரூ.43.15 லட்சத்திலும், திருப்பூரில் 131 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடியிலும், வெள்ளக்கோவிலில் 85 பயனாளிகளுக்கு ரூ.78.60 லட்சத்திலும், உடுமலைப்பேட்டையில் 254 பயனாளிகளுக்கு ரூ.3.04 கோடியிலும், ஊத்துக்குளியில் 134 பயனாளிகளுக்கு ரூ.76.13 லட்சத்திலும் பணிகள் மேற்கொள்ள ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு திட்டங்களிலும் சோ்த்து 3551 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.74.66 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

முன்னதாக, பருவாய் ஊராட்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சேதமடைந்து காணப்படும் வீடுகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ், உதவிப் பொறியாளா் செந்தில்வடிவு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.