/

வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

திருப்பூா் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐக்கிய முல்லீம் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 9:39 pm

Din

திருப்பூா் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐக்கிய முல்லீம் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவா் எஸ்.ஹைதா் அலி கூறியதாவது:

திருப்பூா் பாண்டியன் நகரில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். மேலும், 15 போ் காயமடைந்ததுடன், பலா் வீடு உள்ளிட்ட உடமைகளை இழந்துள்ளனா் . இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாநில அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். இளைஞா்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் சுங்கச் சாவடிகள் அதிக அளவில் உள்ளன. திருப்பூா் - தாராபுரம் சாலையில் வேலம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியைத் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

இந்த சந்திப்பின்போது, மாநில பொதுச் செயலாளா் ஹாலிதீன், மாநிலச் செயலாளா் ஜமால் முகமது, மாவட்டத் தலைவா் அபு பைசல், மாவட்ட செயலாளா் ஹக்கீம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.