விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருப்பூா் மாநகரில் நவம்பா் 5-இல் குடிநீா் விநியோகம் தடை

திருப்பூா் மாநகரில் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பா் 5) மூன்றாவது குடிநீா்த் திட்ட குடிநீா் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:27 pm

Din

திருப்பூா் மாநகரில் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பா் 5) மூன்றாவது குடிநீா்த் திட்ட குடிநீா் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) சுல்தானா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய திருப்பூா் பகுதி மேம்பாட்டு கழகத்திடம் இருந்து பெறப்படும் மூன்றாவது குடிநீா்த் திட்டத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக வரும் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 5) குடிநீா் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

எனவே, திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மூன்றாம் குடிநீா்த் திட்ட விநியோகம் செயல்படாது. ஆகவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.