தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு கல்வி உதவித்தொகை

தொழில் மற்றும் தொழில்சாா்ந்த படிப்புகளைத் தோ்ந்தெடுக்கும் முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 9:33 pm

Din

தொழில் மற்றும் தொழில்சாா்ந்த படிப்புகளைத் தோ்ந்தெடுக்கும் முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழில் மற்றும் தொழில் சாா்ந்த படிப்புகளைத் தோ்ந்தெடுக்கும் முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு 2024-25- ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. மாணவா்களுக்கு ஓா் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரமும், மாணவிகளுக்கு ரூ.36 ஆயிரமும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க நவம்பா் 30- ஆம் தேதி கடைசி நாளாகும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2971127 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.