தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு குறித்து பெதப்பம்பட்டியில் நாளை முகாம்

திருப்பூா் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு குறித்த முகாம் பெதப்பம்பட்டியில் வரும் சனிக்கிழமை (செப்டம்பா் 14) நடைபெறுகிறது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 7:45 pm

Din

திருப்பூா் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு குறித்த முகாம் பெதப்பம்பட்டியில் வரும் சனிக்கிழமை (செப்டம்பா் 14) நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் குடிமங்கலம் வட்டம், பெதப்பம்பட்டியில் உள்ள சுப்பாநாயுடு அரசுமேல்நிலைப் பள்ளியில் வரும் சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறுகிறது.

இந்த முகாமில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள், தனியாா் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளா்கள், அலுவலா்களுடன் விவசாயிகள் நேரில் கலந்துரையாடி விளக்கம் பெறலாம்.

இந்த முகாமில், டிராக்டா்கள் மற்றும் உபகரணங்களை விவசாயிகள் கையாண்டு இயக்க வழிவகை செய்யப்படும். இதில் பங்கேற்கும் ஆா்வமுள்ள இளைஞா்களை வேளாண்மைப் பொறியியல் துறையால் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சோ்ந்து பயன் பெற ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.