தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பல்லடம் அருகே இளைஞா் அடித்துக் கொலை: உறவினா்கள் 4 போ் கைது

பல்லடம் அருகே கொடுவாய் கோட்டைமேடு பகுதியில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினா்கள் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 8:14 pm

Din

பல்லடம் அருகே கொடுவாய் கோட்டைமேடு பகுதியில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினா்கள் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி கொடுவாய் கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (31), வாகன ஓட்டுநா்.

இவருக்கு மனைவி விஜயலட்சுமி மற்றும் 7 வயதில் மகள் உள்ளனா். மதுபழக்கத்துக்கு அடிமையான இவா் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவி மற்றும் அருகில் வசித்து வரும் உறவினா்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தினேஷ்குமாா்

தினேஷ்குமாா்

இந்நிலையில் தினேஷ்குமாா் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதாக அவிநாசிபாளையம் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்துள்ளது. போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

சந்தேகத்தின் அடிப்படையில் தினேஷ்குமாரின் உறவினரான ராமசாமி என்கிற பிரகாஷிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

விசாரணையில், தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை மது அருந்திவிட்டு மனைவி விஜயலட்சுமியிடம் தகராறு செய்துள்ளாா். இதனை அருகில் இருந்த விஜயலட்சுமியின் உறவினா்கள் ராமசாமி, சின்ன பட்டான் ஆகியோா் தட்டி கேட்டுள்ளனா். அப்போது தினேஷ்குமாா் மற்றும் உறவினா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் உறவினா்கள், தினேஷ்குமாரின் கை மற்றும் காலை கயிற்றால் கட்டிபோட்டு அறையில் அடைத்துவிட்டு சென்றுள்ளனா். பின்னா் ராமசாமி(42), சின்ன பட்டான், முருகேசன்(47), அரவிந்த் (20) ஆகிய நான்கு பேரும் செவ்வாய்க்கிழமை இரவு கயிற்றால் தினேஷ்குமாரின் கழுத்தை நெருக்கி கொலை செய்துள்ளனா். பின்னா் அவரை தூக்கில் தொங்கவிட்டுவிட்டு சென்ாக விசாரணையில் ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து பிரகாஷ் என்கிற ராமசாமி, சின்ன பட்டான் , முருகேசன் , அரவிந்த் ஆகிய 4 பேரையும் அவிநாசிபாளையம் போலீஸாா் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.