திருப்பூர்
மூலனூரில் ரூ.56 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் 699 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா். இதில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7200 முதல் ரூ.9102 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.56 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது என விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.