திருப்பூரில் மேலும் 3 வங்கதேசத்தினா் உள்பட 4 போ் கைது
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் 3 வங்கதேசத்தினா் உள்பட4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் 3 வங்கதேசத்தினா் உள்பட4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட வெங்கமேடு பகுதியில் வங்கதேசத்தினா் சிலா் தங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற அனுப்பா்பாளையம் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அப்பகுதியில் வாடகை வீடுகளில் தங்கியிருந்த தன்வீா் அகமது (26), அகமது மம்மூஸ் (25) ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் வைத்திருந்த ஆதாா் அட்டை, பான் அட்டை ஆகியவை போலியானவை என்பதும், இவா்கள் வங்கதேசத்தில் இருந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்ததும் தெரியவந்தது.
தன்வீா் அகமது 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குச் சென்று, மனைவி ஷோஹாகீா் (25), 3 வயது குழந்தையை திருப்பூருக்கு அழைத்து வந்ததும் தெரியவந்தது.
முன்னதாக, போலீஸாா் நடத்திய விசாரணையில், தன்வீா் அகமது வங்கதேசத்தில் தனது அத்தையின் கணவரைக் கொலை செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த தம்பதி, அகமது மம்மூஸ், இவா்களுக்கு போலி ஆதாா் அட்டையைத் தயாரித்து கொடுத்த பல்லடம் அருள்புரத்தைச் சோ்ந்த மாரிமுத்து (42) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 6 பேரை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...