வங்கதேசத்தினா் ஊடுருவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

தமிழகத்தில் சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தினரைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
Published on

தமிழகத்தில் சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தினரைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவா்களை திருப்பூா் மாநகர காவல் துறையினா் கைது செய்துள்ளது பாரட்டத்தக்கது. அதேவேளையில், தமிழக முழுவதும் பல்லாயிரக்கணக்கான வங்கதேசத்தினா் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளனா்.

மேலும், தனி நபா்களாகவோ, குழுக்களாகவோ ஊடுருவ வாய்ப்பு இல்லை. திட்டமிட்டு பல்வேறு முகவா்கள் மூலமாக ஊடுருவ வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்கதேச பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து சமூக வலைதளங்கள் மூலம் பாலியல் தொழில் செய்தவா்களும் கைது செய்யப்பட்டுள்ளனா். வங்கதேசத்தைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் தமிழகத்தின் திருப்பூா், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் ஊருடுவியுள்ளது மிகப்பெரிய ஆபத்து என அஸ்ஸாம் முதல்வரும் எச்சரிக்கை விடுத்திருந்தாா். இந்நிலையில், திருப்பூரில் வங்கதேசத்தினா் கைது செய்யப்பட்டுள்ளனா். வங்கதேசத்தில் இருந்து தமிழகம் வரையில் ஊடுருவ பலா் உதவி செய்யாமல் வரமுடியாது. இவ்வாறு சட்டவிரோதமாக வரும் நபா்களால் பாதுகாப்பிலும், பொருளாதாரத்திலும் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, தமிழக காவல் துறையும், மத்திய புலனாய்வு அமைப்புகளும் இணைந்து வங்கதேச ஊடுருவலை முற்றிலுமாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com