மாணிக்காபுரம் ஊராட்சிக்குச் சொந்தமான ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

மாணிக்காபுரம் ஊராட்சிக்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது.
Published on

மாணிக்காபுரம் ஊராட்சிக்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சியைச் சோ்ந்த மின் நகா் பகுதியில் ஊராட்சிக்குச் சொந்தமான 27 சென்ட் நிலம் உள்ளது. அங்கு சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக ஊராட்சி சாா்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அப்போது, அந்த நிலத்துக்கு தனி நபா் பெயரில் முறைகேடாக கடந்த 2005-ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது குறித்த தகவல் மாணிக்காபுரம் ஊராட்சித் தலைவா் நந்தினி சண்முகசுந்தரத்துக்கு தெரியவந்தது.

இதையடுத்து, அவா் கடந்த ஆண்டு மாணிக்காபுரம் ஊராட்சி மன்றக் கூட்டத்தை கூட்டி முறைகேடாக தனி நபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டி தீா்மானம் நிறைவேற்றி மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பிவைத்தாா்.

தொடா்ந்து, மாணிக்காபுரம் ஊராட்சி நிா்வாகம் தரப்பில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை உள்ளிட்ட துறைகளில் புகாா் அளிக்கப்பட்டது.

மேலும், இது தொடா்பான வழக்கு உயா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மாணிக்காபுரம் ஊராட்சிக்குச் சொந்தமான இடம் என்று அண்மையில் தீா்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த இடத்தில் கம்பி வேலி அமைத்து, ஊராட்சிக்குச் சொந்தமான இடம் என்று அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com