திருப்பூர்
திமிங்கல எச்சத்தைப் பதுக்கி வைத்திருந்தவா் கைது: 6.5 கிலோ பறிமுதல்
திருப்பூா் அருகே திமிங்கல எச்சம் பதுக்கிவைத்திருந்தவரை வனத் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூரை அடுத்த கணபதிபாளையம் பகுதியில் திமிங்கல எச்சத்தைப் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வனத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள வெல்டிங் பட்டறையில் 6.5 கிலோ திமிங்கல எச்சம் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, எச்சத்தைப் பறிமுதல் செய்த வனத் துறையினா், அதைப் பதுக்கிவைத்திருந்த ராஜேந்திரன்(55) என்பவரைக் கைது செய்தனா்.
விசாரணையில், சிவகாசியில் உள்ள ஒருவரிடம் எச்சத்தை வாங்கிவந்து பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.