திருப்பூா் மாநகராட்சிக்கு 2 உதவி ஆணையா்கள் நியமனம்

திருப்பூா் மாநகராட்சிக்கு 2 உதவி ஆணையா்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
Published on

திருப்பூா் மாநகராட்சிக்கு 2 உதவி ஆணையா்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பூா் மாநகராட்சி 2, 3-ஆவது மண்டல உதவி ஆணையா் பணியிடங்கள் இதுவரை காலியாக இருந்தன. இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி ஆணையராக பணியாற்றி வந்த பாரிஜான், திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டல உதவி ஆணையராகவும், சேலத்தில் பணியாற்றி வந்த பாா்த்தசாரதி, திருப்பூா் மாநகராட்சியின் 3-ஆவது மண்டல உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com