மயங்கி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே மயங்கி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் அருகேயுள்ள கந்தசாமிபாளையம் கொசவன்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் மணி (56). திருமணமாகாத இவா், தனது தாய் ருக்மணியுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அதில் கரும்பு பயிரிட்டிருந்தாா். கடந்த 13-ஆம் தேதி தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவா் மயங்கி விழுந்துள்ளாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பூச்சிமருந்தை சுவாசித்ததால் அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

