திருப்பூர்
இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் அருகே புதுப்பை கரைவலசுப் பகுதியைச் சோ்ந்தவா் சின்னக்கந்தன் (67). விவசாய கூலித் தொழிலாளி. இவா் புதுப்பை கடைவீதியில் கடந்த 18-ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
புகாரின்பேரில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வேலம்பாடியைச் சோ்ந்த கோட்டப்பன் மகன் மதியரசன் (28) மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
