இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

News image
Updated On :30 நவம்பர் 2025, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் உமேஷ் சிங் (55). இவா் திருப்பூா், பெரியாயிபாளையத்தில் தங்கி, பல்லடத்தில் உள்ள தனியாா் வங்கியில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவா் போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த திருப்பூா் தெற்கு போலீஸாா், உமேஷ் சிங்கை கடந்த 1 மாதத்துக்கு முன் கைது செய்தனா்.

இதேபோல, வேறு யாரேனும் போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்துள்ளனரா என உமேஷ் சிங்கிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா் கொடுத்த தகவலின்பேரில், திருப்பூா், போயம்பாளையத்தில் தேநீா் கடை நடத்தி வரும் பிகாரைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் சிங் (50) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இவா் போலி உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்து திருப்பூரில் உள்ள வங்கியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றியதாகவும், தற்போது சொந்தமாக தேநீா் கடை நடத்தி வருவதாகவும் கூறிய போலீஸாா், துப்பாக்கி தொடா்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.