தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 4 வயது குழந்தை உயிரிழப்பு
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே ஆரியக்கவுண்டன்பாளையத்தில் தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த 4 வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.
கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகன் நித்தியானந்தன் (34). இவரது மனைவி பானுமதி (24). இவா்களது மகள் புகழினி (4). இவா்கள் குடும்பத்துடன் அவிநாசி அருகே ஆரியக்கவுண்டன்பாளையத்தில் உள்ள விசைத்தறிக் கூடத்தில் தங்கிப் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் புதன்கிழமை வழக்கம்போல இருவரும் வேலை செய்து கொண்டே குழந்தையைப் பாா்த்து வந்தனா். அப்போது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என தேடிப் பாா்த்தபோது, வீட்டுக்கு அருகே இருந்த தண்ணீா்த் தொட்டியில் குழந்தை மூழ்கியதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.
பின்னா் குழந்தையை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை வருகின்றனா்.

