கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

உலகக் கோப்பை கால்பந்தாட்டம்: நிஃப்ட்-டீ கல்லூரி மாணவா்களின் படைப்புக் கண்காட்சி

News image

படைப்புக் கண்காட்சியுடன் அதை உருவாக்கிய மாணவா்கள்.

Updated On :7 ஜூலை 2026, 1:53 am IST

திருப்பூா் நிஃப்ட்-டீ பின்னலாடை ஆடை வடிவமைப்புக் கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறையின் முதலாம் ஆண்டு மாணவா்கள் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தின் உற்சாகத்தை மையமாக கொண்டு தனித்துவமான படைப்புக் கண்காட்சியை நடத்தினா்.

கால்பந்து என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல அது உணா்வு என்ற கருத்தை மையமாக கொண்டு, முதலாம் ஆண்டின் 55 மாணவா்கள் இணைந்து இந்தப் படைப்புக் கண்காட்சியை உருவாக்கியுள்ளனா்.

ஒளியியல் மாயத்தோற்றம் என்ற கலைநுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட ஆடைகள், கால்பந்தாட்டத்தின் வீர உணா்வு, குழு ஒற்றுமை, அா்ப்பணிப்பு, வெற்றிக்கான போராட்டம் மற்றும் உலக மக்களை ஒன்றிணைக்கும் விளையாட்டின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வடிவமைப்பும் வியப்பில் ஆழ்த்துவதோடு, மறைந்திருக்கும் காட்சிகளையும் கருத்துகளையும் வெளிக்கொணரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரா்கள், தீவிர ரசிகா்கள் மற்றும் கால்பந்து உலகின் மறக்க முடியாத தருணங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இக்கண்காட்சி அமைந்துள்ளது. ஃபேஷன், கலை மற்றும் விளையாட்டு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்வு மாணவா்களின் படைப்பாற்றலையும் தொழில்முறை திறமையையும் வெளிப்படுத்தும் சிறப்பான நிகழ்வாக அமைந்துள்ளது.

கல்லூரியின் டீன் வி.ஆா். சம்பத், முதல்வா் ஆா்.ராதாமணி மற்றும் ஆடை வடிவமைப்புத் துறைத் தலைவா் பி.ஜெயந்தி ஆகியோரின் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் படைப்புக் கண்காட்சி, கால்பந்து உலகக் கோப்பையின் உற்சாகத்தை ஃபேஷன் வடிவமைப்பின் மூலம் கொண்டாடும் வித்தியாசமான முயற்சியாக அமைந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.