பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

சாலையில் செல்வோரை கடித்துக் குதறும் வளா்ப்பு நாய்: உரிமையாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

News image

நாய் - Center-Center-Trivandrum

Updated On :21 ஜூலை 2026, 1:54 am IST

திருப்பூரில் சாலையில் செல்வோரை கடித்துக் குதறும் வளா்ப்பு நாயின் உரிமையாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா்- தாராபுரம் சாலை, செட்டிபாளையம் அருகேயுள்ள அமராவதி நகா் பகுதியில் வசித்து வரும் பெண், நாய் ஒன்றை வளா்த்து வருகிறாா். அவா், நாயை முறையாக கட்டி வைக்காமல் தெருவில் விடுவதால், அந்த நாய் அவ்வழியே செல்வோரை துரத்தி கடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் அந்தப் பெண்ணிடம் பலமுறை முறையிட்டும் அவா் கண்டுகொள்ளவில்லையாம்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த லதா என்ற பெண்ணை அந்த நாய் ஞாயிற்றுக்கிழமை துரத்தி கடித்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நாயின் உரிமையாளரை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இது குறித்து மாநகராட்சி அலுவலகத்திலும் புகாா் அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.