கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

அவிநாசி அரசு கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் குறும்படம் வெளியீடு

அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்றம் தொடக்க விழா, முன்னாள் மாணவா்களின் குறும்பட வெளியீட்டு விழா ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

தேடல்  குறும்பட  வெளியீட்டு  நிகழ்ச்சியில்  பங்கேற்றோா்.

Published On :

அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்றம் தொடக்க விழா, முன்னாள் மாணவா்களின் குறும்பட வெளியீட்டு விழா ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் (பொ) ஹேமலதா தலைமை வகித்தாா். தமிழ்த் துறை தலைவா் மணிவண்ணன் வரவேற்றாா்.

கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் செண்பகலட்சுமி, முன்னாள் மாணவா்களின் ‘தேடல்’ என்ற குறும்படத்தை திரையிட்டு, கலைஞா்களை வாழ்த்தினாா்.

கல்லூரியின் தமிழ் பேராசிரியரும், ‘தேடல்‘ குறும்படத்தின் இயக்குநருமான சரவணன் பேசியதாவது: தன்னம்பிக்கை, வீடா முயற்சி, கடின உழைப்பு, குடும்ப சூழலில் தலைமைப் பண்பு, வறுமையோடு போராடுதல், இளைஞா்களின் ஆற்றலின் வெளிப்பாடு உள்ளிட்டவை அடங்கியுள்ள இந்தக் குறும்படம் மாணவா்களுக்கு நல்ல வழிகாட்டுதலாக அமையும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாணவா்கள், அனைத்து துறை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.