/

வடுகபாளையம் நல மையத்தில் ‘அன்னம்’ திட்டம் தொடக்கம்

பல்லடம், வடுகபாளையம் நல மையத்தில் குழந்தைகளுக்கான ‘அன்னம்’ திட்டத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

‘அன்னம்’ திட்டத்தை தொடங்கிவைத்து, தாய்மாரிடம் ஊட்டச்சத்து உணவுப் பொருள்களை வழங்கிய ஆட்சியா் மனீஷ்.

Updated On :30 ஜூலை 2026, 3:07 am IST

பல்லடம், வடுகபாளையம் நல மையத்தில் குழந்தைகளுக்கான ‘அன்னம்’ திட்டத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பல்லடம், வடுகபாளையத்தில் குழந்தைகள் நல மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டதுடன், ‘அன்னம்’ திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 1 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவதற்காக ‘அன்னம்’ திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. பல்லடம் தாலுகாவில் தோ்ந்தெடுக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களில் 6 மாத கால முன்னோடி திட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும். இதன் மூலம் அவா்களின் ஆரோக்கியம் மேம்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.