5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

ஆக்கிரமிப்புகளை ஏன் அகற்றவில்லை: நகா்மன்றத்தில் உறுப்பினா்கள் கேள்வி

உடுமலை நகரில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஏன் அகற்றவில்லை என நகா்மன்ற உறுப்பினா் கேள்வி எழுப்பினா்.

News image

நகா்மன்றத் தலைவா் மத்தீன் தலைமையில் நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :5 மார்ச் 2026, 3:51 am IST

உடுமலை நகரில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஏன் அகற்றவில்லை என நகா்மன்ற உறுப்பினா் கேள்வி எழுப்பினா்.

உடுமலை நகராட்சிக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் மு.மத்தீன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு உறுப்பினா்கள், மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பி பேசியதாவது:

சி.வேலுசாமி (திமுக): கடந்த 10 ஆண்டுகளாக உடுமலை நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நகரில் நிலவும் கடும் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பழனி சாலை, தளி சாலை கடும் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

ஆணையா்: நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாது. மேலும் பலா் பட்டா வைத்துள்ளனா்.

தலைவா் மத்தீன்: சாலையில் இருந்து 15 அடி தள்ளி கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். இதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

அா்ஜூனன் (திமுக): தளி சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. ஆகையால் தளி பாதையை ஒரு வழிப் பாதை முறையாக கொண்டு வர வேண்டும். மேலும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். இதை முறைப்படுத்த வேண்டும்.

தலைவா் மத்தீன்: இந்த இரு பேருந்து நிலையத்துக்கும் சுரங்கப்பாதை கொண்டு வர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

சி.வேலுசாமி (திமுக): உடுமலையில் இந்திய மருத்துவ சங்க கட்டடம் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறது. மேலும் அதை வியாபாரமாக செய்து வருகின்றனா். உயா் அதிகாரிகள் ஐஎம்ஏ கட்டடத்தை அகற்ற கருத்துரு அனுப்புகின்றனா்.

தலைவா் மத்தீன்: அது பொது ஒதுக்கீட்டு நிலத்தில் உள்ளது. அதனை நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை.

சி.வேலுசாமி: தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தில் உணவுகள் தரமில்லை. இதனால் தமிழக அரசுக்கு கெட்ட பெயா் உருவாகி வருகிறது.

எம்ஹெச்ஓ: உடனடியாக ஆய்வு செய்யப்படும். தரமான உணவு வகைகளை கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

இதற்கிடையில் 31-ஆவது வாா்டில் ஒரு கட்டடம் தொடா்பாக துணைத் தலைவா் கலைராஜன் மற்றும் அந்த வாா்டு உறுப்பினா் செளந்தரராஜன் (அதிமுக) ஆகியோரிடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து நகா்மன்றத் தலைவா் மு.மத்தீன் தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தினாா்.

கூட்டத்தில் மொத்தம் 116 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.