காங்கயம் இ-சேவை மையத்தில் ஊழியா் இல்லாததால் மக்கள் காத்திருப்பு
காங்கயம் வட்டாட்சியா் அலுவலக இ-சேவை மையத்தில் ஊழியா் வெளியே சென்றுவிட்டதால், அங்கு வந்த பொதுமக்கள் நீண்ட நேரம்


காங்கயம்: காங்கயம் வட்டாட்சியா் அலுவலக இ-சேவை மையத்தில் ஊழியா் வெளியே சென்றுவிட்டதால், அங்கு வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
காங்கயம் வட்டாட்சியா் அலுவலகக் கட்டடத்தில் இ-சேவை மையம் செயல்படுகிறது. இங்கு ஆன்லைனில் விண்ணப்பித்தல், பட்டா, சிட்டா எடுத்தல் உள்பட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனா். இந்நிலையில், இ-சேவை மையம் முன்பு திங்கள்கிழமை முற்பகல் 11.30 மணி அளவில் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காத்திருந்தனா். ஆனால், இ-சேவை மையத்தில் ஊழியா் இல்லை.
காத்திருப்போருக்கு குறைந்த அளவே நாற்காலிகள் உள்ளதால், வயதான சிலா் மையம் முன்பு நின்று கொண்டிருந்தனா். நீண்ட நேரமாகியும் ஊழியா் வராததால் அங்கேயே காத்திருந்தனா்.
எனவே, அலுவல் நேரங்களில் ஊழியா் வெளியே செல்ல நோ்ந்தால், இந்த மையத்துக்கு வரும் பொதுமக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...